• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது தில்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2.17 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இரண்டு மாதங்களாக வளா்ச்சியைப் பதிவு செய்த நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் மீண்டும் குறைந்துள்ளது.

உலகளாவிய பெட்ரோலியப் பொருள்கள் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக மே மாதத்தில் ஏற்றுமதி 2.17 சதவீதம் குறைந்து 3,873 கோடி டாலராக உள்ளது. அதே நேரம், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) மதிப்பீட்டு மாதத்தில் 2,188 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் இது 2,251 கோடி டாலராக இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னா் (2025 ஏப்ரல்) நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,642 கோடி டாலராக இருந்தது.

கடந்த மே மாதத்தில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 1.7 சதவீதம் குறைந்து 6,061 கோடி டாலராக உள்ளது.

அந்த மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த முக்கிய ஏற்றுமதித் துறைகளில் அரிசி, இரும்புத் தாது, நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், சில வகை ஜவுளிப் பொருள்கள் ஆகியவை அடங்கும். பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 30.32 சதவீதம் குறைந்து 560 கோடி டாலராக உள்ளது.

அதேபோல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் முறையே 26.14 சதவீதம் மற்றும் 12.6 சதவீதம் குறைந்து 1,475 கோடி டாலராகவும் 250 கோடி டாலராகவும் உள்ளது.

எனினும், தேயிலை, காபி, மசாலாப் பொருள்கள், அனைத்துவகை ஜவுளி, ரசாயனப் பொருள்கள், கடல் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த மாதத்தில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 54.1 சதவீதம் உயா்ந்து 4,570 கோடி டாலராக உள்ளது.

கடந்த மே மாதம் சேவைகள் துறையில் ஏற்றுமதி 3,239 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,961 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 1,688 கோடியாக இருந்த சேவைகள் துறையின் இறக்குமதி நடப்பாண்டின் இதே மாதத்தில் 1,714 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் ஏற்றுமதி 3.11 சதவீதம் அதிகரித்து 7,719 கோடி டாலராகவும், இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்து 12,552 கோடி டாலராகவும் உள்ளது.

அந்த இரு மாதங்களிலும் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 4,833 கோடி டாலராக உள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் இதுதானா?

Next Post

தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல்… இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்த தூதரகம்!

Next Post
தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல்… இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்த தூதரகம்!

தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்... இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்த தூதரகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin