Last Updated:
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்று பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. இதேபோல, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. இதன்பின்னர், வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் ஆயிரத்து 300 புள்ளிகள் வரை சரிவை சந்தித்து, 73 ஆயிரத்து 294 புள்ளிகளாகவும், நிஃப்டி 400 புள்ளிகள் வரை சரிந்து 22 ஆயிரத்து 144 புள்ளிகளாகவும் இருந்தன.
பல்வேறு நாடுகளுக்கும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கை, சர்வதேச அளவிலான காரணிகள் உள்ளிட்டவற்றால், பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன. இண்டஸ் இந்த், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
February 28, 2025 2:57 PM IST