சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சக ஊழியரின் காதைக் கடித்து, தகராறில் ஈடுபட்டதாக நேற்று (ஜூலை 3) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டை இன்ஜினியரிங் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றும் 21 வயதுமிக்க செந்தில்குமார் விஷ்ணுசக்திக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர்… சில மணிநேரத்திலேயே ப*லியான சோகச் சம்பவம்!
செந்தில்குமாருக்கும் சக ஊழியரான 31 வயதான நேசமணி ஹரிஹரனும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதில் செந்தில்குமார், நேசமணியின் காதைக் கடித்து துப்பியதாகவும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நேசமணிக்கு வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் செந்தில்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
என்ன நடந்தது?
இருவரும் கல்லாங் தங்கும் விடுதியில் தங்கி இருந்ததாகவும், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 7 மணியளவில், செந்தில்குமார் மூன்று பீரை அருந்திவிட்டு விடுதிக்குத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. .
தனது படுக்கையில் அமர்ந்து, ஹெட்செட் மாட்டியபடி நேசமணி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த செந்தில்குமார், அவரை நோக்கி தன்னை உளவு பார்ப்பதாகவும், வேலை குறைகள் குறித்து மேற்பார்வையாளரிடம் புகார் அளிப்பதாகவும் சத்தமாகப் பேசத் தொடங்கினார்.
தன்னைப் பின்தொடர்ந்து வந்ததற்காக நேசமணியை நோக்கி “நாய்” என்று திட்டியதாகவும்.கூறப்படுகிறது.
கடுமையாக வாக்குவாதம்
இதனால் அவருக்கு கோபம் ஏற்பட, இருவருக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நேசமணி திரும்பி தனது படுக்கையை நோக்கி நடந்து செல்கையில் செந்தில்குமார் அவரது முதுகில் குத்து விட்டார் என சொல்லப்படுகிறது.
பின்னர் நேசமணியும் பதிலுக்கு குத்து விட, இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டனர்.
அப்போது, செந்தில்குமார் நேசமணியின் பின்னால் கட்டிப்பிடித்து, இடது காதைக் கடித்து துப்பியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் விடுதியில் இருந்த மற்ற ஊழியர்கள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர்.
காவல்துறையினரிடம் புகார்
அதன் பின்னர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனை அடுத்து நேசமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவரது வலது கட்டைவிரலில் எலும்பு முறிந்ததாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சை மேற்கொண்டும் அவரின் காதை சரி செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட செந்தில்குமார் விஷ்ணுசக்திக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பங்களாதேஷ் நாட்டவர் கைது: சாங்கி விமான நிலையத்தில் திருட்டு வேலை – வளைத்து பிடித்த போலீஸ்

