சிங்கப்பூர்: இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோவா சூ காங் வே மற்றும் சுங்கே கடுட் டிரைவ், சுங்கே கடுட் அவென்யூ மற்றும் சுங்கே கடுட் லூப் ஆகியவற்றுக்கு இடையேயான சந்திப்பில் இந்த விபத்து நடந்தது.
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது
இதில் 9 பேரை ஏற்றிச் சென்ற லாரி, சிவப்பு விளக்கை கவனிக்க தவறி பொறுப்பில்லாமல் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனால் அந்த லாரி, 11 பயணிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநருடன் சேர்த்து இந்த சம்பவத்தில் மொத்தம் 21 பேருக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
லாரியில் சிக்கிய ஒருவர், ஹைட்ராலிக் மீட்பு கருவிகள் உதவியுடன் SCDF வீரர்களால் மீட்கப்பட்டார்.
விபத்தில் சிக்கிய ஆறு ஊழியர்கள் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், மேலும் 15 ஊழியர்கள் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்புகள் மற்றும் உடல் உள் வலிகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதலில் விதியை மீறி வந்த லாரி ஓட்டுநர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய நகரில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவை நிறுத்தம்
கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து உடைந்து விபத்து: 37 வயது ஊழியருக்கு அறுவை சிகிச்சை