தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் உள்ள நாவுல, நாலந்தா பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (26.04.2026) காலை சுமார் 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 11 பேரும் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, இவர்களுள் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்தின் சாரதி கைது
விபத்து நடந்த நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் கண்டியிலிருந்து கொழும்புக்குப் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், திடீரென இடம்பெற்ற குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்புவதற்கு அவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், தனியார் பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒரு பேருந்து சாரதி தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நௌலா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

