காஜாங்:
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பள்ளி மாணவர் ஒருவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதிப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2:30 மணியளவில் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அம்மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
“கிடைக்கப்பட்ட CCTV காட்சிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் பள்ளி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
“இதுவரை, இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக எட்டு சாட்சிகள் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001,பிரிவு 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.


