Last Updated:
அமைச்சர் ஜெய்சங்கர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து, இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து பேசினார்.
இந்தியா – சீனா இடையிலான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட 10 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் ஏற்பட்டு வரும் சமீபத்திய வளர்ச்சி குறித்து பேசினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று காலை பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை எனது சக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுடன் சந்தித்தேன்.
Called on President Xi Jinping this morning in Beijing along with my fellow SCO Foreign Ministers.
Conveyed the greetings of President Droupadi Murmu & Prime Minister @narendramodi.
Apprised President Xi of the recent development of our bilateral ties. Value the guidance of… pic.twitter.com/tNfmEzpJGl
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 15, 2025
ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் விளக்கினேன்” எனப் பதிவு செய்துள்ளார்.
July 15, 2025 9:25 PM IST
“இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து ஜி ஜின்பிங்கிடம் விளக்கினேன்” – அமைச்சர் ஜெய்சங்கர்


