ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று (25.03.2024) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில் இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்ட இரண்டு பெண்கள் வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை செய்கின்றனர். இந்நிலையில் சாலையில் ஆபத்தான முறையில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
उक्त शिकायत का संज्ञान लेते हुए संबंधित वाहन के विरुद्ध यातायात नियमों का उल्लंघन करने पर नियमानुसार ई-चालान (जुर्माना 33000/- रुपए) की कार्यवाही की गई है।
यातायात हेल्पलाइन नं0- 9971009001 pic.twitter.com/8iOBgEESgW— Noida Traffic Police (@noidatraffic) March 25, 2024
இதையும் படிங்க : அந்தரங்க உறுப்பில் முடியை அகற்ற முயன்ற இளைஞர்.. கோமாவுக்கு சென்ற பரிதாபம்!
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீஸ் ரூ.33,000 அபராதம் வித்தித்துள்ளனர். இந்நிலையில் வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதித்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…