“ஈரானுக்கும், எங்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஐந்து நாள்களுக்கு ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ராணுவ தாக்குதல் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
இதனால், அமெரிக்கா, ஆசிய சந்தைகள் பாசிட்டிவாகவே உள்ளது. இந்திய சந்தையிலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

“போர் தொடங்கியதில் இருந்து சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் தான் உள்ளன. “Sell on Rise’ என்பது சந்தையின் இப்போதைய ஸ்ட்ரேட்டஜி.
போரினால் சந்தை இறங்கியிருந்த போது, பங்குகளை வாங்கியவர்கள், இப்போது சந்தை ஏற்றம் காணும்போது அதை விற்கலாம். இந்த நேரத்தில் ‘பிராஃபிட் புக்கிங்’ செய்வது தான் சரியான அணுகுமுறை.
இது ஒரு டிரேடிங் ஸ்டைல் ஆகும்.
இந்த ஸ்ட்ரேட்டஜியை சந்தை 22,900 – 23,450-க்குள் இருக்கும் போது பயன்படுத்தலாம். இது அப்போது தான் வர்க் அவுட் ஆகும்.
மீண்டும் வாங்க வேண்டுமென்றால் 22,000 – 22,300 வரும் போது வாங்க வேண்டும். அதன் பின் மேலே சொன்ன ரேஞ்ச் வரும்போது, விற்க வேண்டும். இந்த ரிப்பீட்டு தான் Sell on Rise ஸ்ட்ரேட்டஜி”.

