Last Updated:
கோவாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு கோவாவின் பானாஜி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். அர்போரா கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், விடுதியின் சமையல் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்டர்ந்து, அங்கிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தீ பரவியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் விடுதி ஊழியர்கள் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் என கூறியுள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், சட்டவிரோதமாக இரவு விடுதி செயல்பட்டிருதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
December 07, 2025 6:47 AM IST


