• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 01, 2026 3:12 PM IST

ஹரியானா ஃபரிதாபாத் பகுதியில், பேருந்துக்காக காத்திருந்த 28 வயது பெண்ணை இருவர் வேனில் கடத்தி குர்கான் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோப்பு படம்
கோப்பு படம்

ஹரியானாவில் இரவில் பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் திங்கட்கிழமை இரவில் 28 வயதான பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் நள்ளிரவு வரை பேருந்து எதுவும் வராமல் இருந்துள்ளது. இதனால், இளம்பெண் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்றுள்ளார். 12 மணி கடந்த நிலையில் அவ்வழியாக சிறிய வேன் ஒன்று வந்துள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே பெண், தனியாக நிற்பதை பார்த்து அந்த வேன் அவரின் அருகில் வந்துள்ளது.

அதில், இருந்த இருவர் பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். பின்னர், அவர் கூறிய இடத்தில் இறக்கி விட்டுவதாக உறுதியளித்து லிஃப்ட் கொடுத்துள்ளார். வேன் சிறிது தூரம் சென்றதும், இளம் பெண் கூறிய இடத்திற்குப் பதிலாக குர்கான் சாலையில் சென்றுள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, வேனில் இருந்த இருவரும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டியுள்னர். தொடர்ந்து, ஆள் இல்லாத பகுதிக்கு வேனை ஓட்டிச் சென்றவர்கள், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை, 3 மணி வரை மாறி மாறி அப்பாவி பெண்ணை அந்த அரக்கர்கள் சீரழித்துள்ளனர்.

இறுதியில், எஸ்.ஜி.எம். நகரில் உள்ள ராஜா சௌக் அருகே, ஓடும் வேனில் இருந்து பெண்ணை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். சாலையில் விழுந்த பெண்ணிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பெண், தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். பின்னர், கூடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரின் உடல்நிலை சீராக உள்ள போதும், தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பித்து பிடித்தது போன்று உள்ளதாக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், பெண்ணை சீரழித்த இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப சண்டை காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணுக்கு, லிஃப்ட் கொடுப்பதாக கூறி வேனில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஹரியானாவில் கதிகலங்க வைத்துள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஹரியானா: இரவில் இளம்பெண் வேனில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

Read More

Previous Post

Tamilmirror Online || ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம்

Next Post

ஒரு சிகரெட் விலை ரூ. 72! எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா?

Next Post
ஒரு சிகரெட் விலை ரூ. 72! எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா?

ஒரு சிகரெட் விலை ரூ. 72! எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin