Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒரு வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக இருந்துவந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இரவு அன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதேபோல், இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இரண்டு தரப்பில் இருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வரும் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப் பதிவில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “ஒரு உரையாக இல்லாவிட்டாலும், சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். துணை ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில நாட்களே உள்ளன. உங்கள் கட்சியின் நலனுக்காக அல்ல, நாட்டின் நலனுக்காக வாக்களிக்குமாறு நான் உங்களை மனதார கேட்டுக்கொள்கிறேன்.
VIDEO | Ahead of Vice Presidential polls, Opposition Vice Presidential candidate B Sudershan Reddy shares a message. He says, “I would like to put forward a few thoughts before you, though not as a speech. The Vice Presidential election is just a few days away, and I sincerely… pic.twitter.com/CFxxVl9uJY
— Press Trust of India (@PTI_News) September 7, 2025
நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அது எனக்கு சாதகமாகவோ அல்லது உங்களுக்கு சாதகமாகவோ இருக்காது, மாறாக நாட்டின் நலனுக்காகவே இருக்கும் என்று நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
September 07, 2025 6:15 PM IST
இரண்டு நாளில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்… திடீரென வீடியோ வெளியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி


