மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையாக தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண்ணொருவரை கடுமையாக தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்க மாலை, 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்லடி பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே பணத்தை இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை 12 மணியளவில் குறித்த வீட்டின் குளியலறை ஜன்னல் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங். (இலங்கை நாணயப்படி இரண்டு கோடி 40 லட்சம் )மற்றும் ஒன்றேகால் பவுண் தங்கம், 29 ரூபாய் ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் .
குறித்த வீட்டில் தனிமையாக தங்கி இருந்த 62 வயதுடைய பெண்மணியை கடுமையாக தாக்கி விட்டு மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கணவரும் மகளும் ஸ்விஸ் நாட்டில் தங்கி இருக்கின்ற நிலையில் குறித்த பெண்மணி ஸ்விஸ் நாட்டு பிரஜையாக இருந்த போதிலும் தனது வீட்டை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து தனது வீட்டில் தற்காலிகமாக தங்கி இருந்த நிலையிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ.றஹீம் தலைமையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு குறூப் நிருபர்
The post இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள் கொள்ளை appeared first on Thinakaran.
&w=1200&resize=1200,675&ssl=1)