பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF)மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF)என இரண்டு சேமிப்பு திட்டங்களுமே ஒரு சில ஒற்றுமைகளுடன் ஓய்வு கால திட்டத்திற்கான பலன்களை வழங்குகின்றன. இதில் வரிச் சலுகைகள், நீண்ட கால முதலீடுகள், நல்ல வட்டி விகிதங்கள், பாதுகாப்பானவை மற்றும் பகுதி வித்டிராயல்கள் போன்றவை அடங்கும்.
வரி சலுகைகள்:
PPF மற்றும் VPF அக்கவுண்டுகளில் நீங்கள் செய்யக்கூடிய பங்களிப்புகள் வருமான வரி சட்டம் 1961 இல் உள்ள பிரிவு 80C இன் கீழ் வரி பிடித்தங்களுக்கு தகுதி பெறுகிறது. இதன் மூலமாக நீங்கள் வரிக்கு உட்பட்ட உங்களது வருமானத்தை குறைத்து வரி பணத்தை சேமிக்கலாம்.
நீண்ட கால முதலீடு:
இரண்டு திட்டங்களுமே நீண்டகால சேமிப்பு சேமிப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. PPF திட்டமானது 15 வருட மெச்சூரிட்டி காலத்தை கொண்டுள்ளது. விருப்பப்பட்டால் நீங்கள் இதனை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் VPF நீங்கள் ஓய்வு பெறும் வரை நீடித்திருக்கும்.
வட்டி விகிதம்:
PPF மற்றும் VPF அக்கவுண்டுகள் ஆகிய இரண்டுமே நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டியை வழங்குகிறது. இதற்கான வட்டியை அரசு குறிப்பிட்ட கால அளவில் ஆய்வு செய்து மாற்றி அமைக்கும்.
பாதுகாப்பானது:
PPF மற்றும் VPF ஆகிய இரண்டு திட்டங்களுமே அரசு ஆதரவு பெறக்கூடிய திட்டங்கள் என்பதால் இவை பாதுகாப்பான முதலீட்டு ஆப்ஷன்களாக கருதப்படுகின்றன.
பகுதியளவு வித்டிராயல்கள்:
ஒரு குறிப்பிட்ட லாக்-இன் பீரியட்க்கு பிறகு இரண்டு திட்டங்களில் இருந்துமே நீங்கள் பாதி அளவு பணத்தை வித்ட்ரா செய்வதற்கு அனுமதிக்கப்படுவீர்கள். எனினும் எப்போது மற்றும் எவ்வளவு பணத்தை வித்ட்ரா செய்யலாம் என்பது விதிகளை பொறுத்து அமையும்.
PPF vs VPF: வரிவிதிப்பு :
PPF: இந்த திட்டத்திற்கு பிரிவு 80C இன் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வரி பிடித்தம் அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலமாக பெறப்படும் வட்டி விகிதம் மற்றும் மெச்சூரிட்டி தொகை ஆகிய இரண்டுக்கும் வருமான வரி சட்டத்தின் 10(11) இன் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
VPF: இந்த திட்டத்திற்கும் பிரிவு 80C இன் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வரி பிடித்தம் வழங்கப்படுகிறது. மேலும் VPF திட்டம் மூலமாக நீங்கள் பெறக்கூடிய எந்த ஒரு வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
VPF மெச்சூரிட்டி தொகையை நீங்கள் ஐந்து வருடம் கழித்து வித்ட்ரா செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே பாதி அளவு அல்லது முழு பணத்தையும் வித்ட்ரா செய்துவிட்டால் அந்தத் தொகைக்கு நீங்கள் கட்டாயமாக வட்டி செலுத்த வேண்டும்.
Also Read : அன்று பழ வியாபாரின் மகன்… இன்று ரூ.400 கோடி வருவாய் தரும் நிறுவனத்தின் தலைவர்..
PPF vs VPF: இரண்டில் எது சிறப்பான திட்டமாக அமைகிறது?
PPF மற்றும் VPF ஆகிய இரண்டுமே வட்டி விகிதங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வரி போன்ற பல்வேறு விதமான பலன்களை வழங்குகின்றன.
முதலீட்டு தொகையில் ஓரளவு நெகிழ்வுத் தன்மையை விரும்பக்கூடிய முதலீடாளர்களுக்கு PPF சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதே நேரத்தில் மாத வருமானம் பெற்று, நிறுவனம் மூலமாக EPF செலுத்தி வரும் முதலீட்டாளர்கள் மற்றும் தங்களது ஓய்வு கால சேமிப்பை மேம்படுத்த நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு VPF அற்புதமான சாய்ஸாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)