Last Updated:
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதைப் பெருமையாகக் கருத வேண்டும்
இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
இன்றைக்கு மன் கி பாத் நிகழ்ச்சியின் 125 ஆவது எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதைப் பெருமையாகக் கருத வேண்டும். லோக்கலுக்கு குரல் கொடுங்கள் (vocal for local) மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (தற்சார்பு இந்தியா) என்ற மந்திரம் மட்டுமே ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும். என்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட சூழலில், பிரதமர் மோடியின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தப் பருவமழைக் காலத்தில், இயற்கைப் பேரிடர்கள் நம் நாட்டைச் சோதித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை நாம் கண்டோம். வீடுகள் சேதமடைந்தன, வயல்வெளிகள் மூழ்கின.
என்று தெரிவித்தார்.
August 31, 2025 7:23 PM IST
‘இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு


