பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் 24ஆம் தேதி பி.டி.ஐ. அலுவலகத்தில் தலைநகர மேம்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், சட்டவிதிகளை மீறியதாக கூறி, கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோட்டில் பி.டி.ஐ. கட்சி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


