• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இமாலயத்தை இலக்கு வைக்கும் “தண்ணீா் அரசியல்”!

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இமாலயத்தை இலக்கு வைக்கும் “தண்ணீா் அரசியல்”!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனித இனத்தின் வளா்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக நீா் வளம் இருந்து வருகிறது. உலகளாவிய மக்கள்தொகை அசுர வேகத்தில் தொடர்ந்து வளா்ந்து வருவதால், தண்ணீரின் தேவையும், முக்கியத்துவமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீா் வளம் உலகின் இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல உலக அரசியலுக்கும் முக்கியமான உந்து சக்தியாக மாறியிருக்கிறது. எண்ணெய் வளங்களை கொள்ளையிடும் நோக்கில் தொடுக்கப்பட்ட போர்களை வாழும் காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம். அது தவிர, உலகம் இரண்டு யுத்தங்களை சந்தித்திருக்கிறது. அடுத்த மூன்றாவது உலக யுத்தம் தண்ணீா் மீது நாடுகளுக்குள்ள ஆதிக்கத்தின் காரணமாக இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மிக வேகமாக வளரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தண்ணீர் ஒரு மோதலாக உருமாறி வருகிறது.

இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள நீா் ஆதாரங்கள் சா்சை்சைகளுக்கு தூபமிட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நாடுகளின் எல்லைகளை ஊடறுத்துப் பாய்ந்தோடும் ஆறுகள் இந்த இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தையும், புவிசார் அரசியல் முறுகல்களையும் உருவாக்கி வருகின்றன.

நீா் மீதான ஆதிக்கத்தால் உருவாகும் பதற்றத்தின் ஆணி வேராக, சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட காரணிகள் ஆதாரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் வளா்ந்து வரும் தொழில்துறையின் அசுர வளா்ச்சியின் காரணமாக, நீர் ஆதாரங்களின் மீது தனது ஆதிக்கத்தையும், அழுத்தத்தையும் பிரயோகிக்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இரு நாடுகளையும் ஊடறுத்து பாய்ந்தோடும் நதிகளை கட்டுப்படுத்துவதில் சீனா கொண்டுள்ள அதீத ஆா்வம் பிராந்தியத்தில் தீராத சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும், வற்றாத நதிகளின் வலையமைப்பைக் கொண்ட இமயமலைப் பகுதி இந்த சா்ச்சையின் மையப் புள்ளியாக மாறியிருக்கிறது. பனி படா்ந்த இந்த பூமி அரசியல் முறுகல்களின் உஷ்ணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய முக்கிய பகுதியில் இருக்கும் பிரம்மபுத்திரா நதி (சீனாவில் யார்லுங் சாங்போ என அழைக்கப்படுகிறது), திபெத்தில் உருவாகி இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பாய்கிறது. திபெத்தில் இருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் சிந்து நதி பாய்கிறது. மற்றும் சட்லஜ் நதி, திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவுக்குள் பாய்கிறது.

பிராந்தியத்தில் எல்லைகளைத் தாண்டி பாயும் நதிகளை இலக்கு வைக்கும் சீனா, தனக்கேயுரிய “ நீா் ஆதிக்க வியூகம்” ஒன்றை வகுத்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பாய்ந்தோடும் நதிகளைத் தடுக்கும் நோக்கில் சீனா நிர்மாணித்து வரும் அணைகள், இந்தியாவின் நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட பல சா்ச்சைகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சீனா, திபெத்தின் மீது தனது ஆதிக்கத்தையும், பிடியையும் இறுக்குவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இந்த பெறுமதிமிக்க நீா் வளமே இருந்து வருகிறது.

இமயமலையில் அமைந்துள்ள திபெத்திய பீடபூமி, மஞ்சள், யாங்சே, சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா, சால்வீன் மற்றும் மீகொங் உள்ளிட்ட ஆசியாவின் பத்து முக்கிய நதிகளின் மூல ஊற்றுக்களின் முக்கிய பிறப்பிடமாக கருதப்படுகிறது. இந்த உயரிய நீா் வளங்களின் காரணமாகவே திபெத் “ஆசியாவின் நீர் கோபுரம்” என்று அழைக்கப்படுகிறது.

பதினொரு நாடுகளை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆறுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து தெற்காசியாவில் இந்தியா வரையிலும், தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் வரையிலும் பல பில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கிக் கொண்டிருகின்றன.

புவியியல் ரீதியிலான சீனாவின் அமைவிடம் காரணமாக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான ஆறுகளின் ஏகபோக உரிமையையும், ஆதிக்கத்தையும் சீனா பெற்றுள்ளது.

சிந்து மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் இரண்டும் சீனாவிலிருந்து அதன் எல்லைகள் ஊடாக இந்தியாவிற்குள் பாய்கின்றன.

உண்மையில், உலகின் வேறு எந்த நாடுகளையும் விட சீனாதான் அதிக நீர் ஆதாரங்களைக் கொண்ட நாடாக இருக்கிறது. திபெத்திய பீட பூமியின் நீர் வளத்தை தனது கட்டுப்பாட்டில் சீனா வைத்திருந்த போதிலும், தொழிற்துறை வளர்ச்சி மற்றும் பாரிய சூழல் மாசடைவின் காரணமாக அது பாரிய நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியாவின் முக்கிய நீா் ஆதாரம் ஒன்றான பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா தனது செல்வாக்கைச் செலுத்தி வருவதும், ஓடும் நதிகளை இடைமறித்து அணைகளைக் கட்டி வருவதும், சீன, இந்திய மோதலுக்கு முக்கிய காரணிகளாக மாறியுள்ளது.

சீனாவுடன் முறையான நீர் பகிர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லாத காரணத்தால், இந்த திட்டங்களால் இந்தியாவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றன.

பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் பகுதியில் சீனா அணைகளைக் கட்ட ஆரம்பித்த நிகழ்வு இரு நாடுகளுக்கிடையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 2015 இல் திறக்கப்பட்ட “சன்ங்மு” (Zangmu) அணை நிர்மாணத் திட்டம் , நீர் மின்சார மேம்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டதாக சீனா அறிவித்தது.

சீனாவினால் நிர்மாணிக்கப்படும் இந்த அணைகள், கீழ்நோக்கி ஓடும் நதி நீரின் ஓட்டத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நீர் வளத்தைக் கட்டுப்படுத்தும் திறனையும் சீனாவுக்கு வழங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இது வெள்ளம் மற்றும் வறட்சி சூழ்நிலைகளில் தனது நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என இந்தியா கூறி வருகிறது.

பிரம்மபுத்திராவிலிருந்து தண்ணீரை அதன் வறண்ட வடக்குப் பகுதிகளுக்குத் திருப்புவதற்கான சீனாவின் திட்டங்களை இந்தியா எச்சரித்திருந்தது. இத்தகைய திசைதிருப்பல்கள் இந்தியாவுக்குள் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் ஒட்டுமொத்த நீர் பாதுகாப்பையும் பாதிக்கும் என்று இந்தியா கூறுகிறது.

பிரம்மபுத்திரா நதியில் சீனாவின் நீர் திட்டங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடனான தரவுப் பகிர்வுக்கு இந்தியா மீண்டும் மீண்டும் சீனாவை கேட்டு வருகிறது. வெள்ள அனா்த்த காலங்களில் போது நீர்நிலை தரவுகளை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புக்கொண்ட போதிலும், இந்த ஏற்பாடு போதுமானதாகவும், தெளிவாகவும் இல்லை என்று இந்தியா கூறி வருகிறது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எழுந்து வரும் நீா் வளப் பங்கீடு பிரச்சினை புவிசார் மற்றும் பிராந்திய அரசியல் பதற்றங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பிராந்திய மோதல்களின் வரலாறு மிக நீண்டது. குறிப்பாக இமயமலைப் பகுதியில், அவை அவ்வப்போது இராணுவ மோதல்களாக வெடித்தும் உள்ளன. எல்லைகளைக் கடந்து நீர் வளங்களின் கட்டுப்பாட்டை தன்னகத்தே வைத்திருக்க வேண்டும் என்ற நப்பாசையில் இமாலய பிரதேசத்தில் சீனா மேற்கொண்டு ஆதிக்க செயற்பாடுகள், பிராந்தியத்தில் சிக்கல்களையும், புவிசார் பதற்றங்களையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

– ஆதவன்

The post இமாலயத்தை இலக்கு வைக்கும் “தண்ணீா் அரசியல்”! appeared first on Thinakaran.

Read More

Previous Post

இந்த துறையில் வேலை தேட சிங்கப்பூரில் புதிய வேலை தேடும் தளம் அறிமுகமா?

Next Post

வேகம் குறைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்… காரணம் என்ன ?!

Next Post
வேகம் குறைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்… காரணம் என்ன ?!

வேகம் குறைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்... காரணம் என்ன ?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin