சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்தவரும், சிஎஸ்கே அணியின் அடையாளமாகவும் திகழ்ந்து வந்த எம்எஸ் தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போது 43 வயதாகும் தோனி சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

