• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இப்படியும் கூட நடக்குமா..? திருப்பதி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் சிசிடிவி காட்சிகள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இப்படியும் கூட நடக்குமா..? திருப்பதி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் சிசிடிவி காட்சிகள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 7:40 PM IST

திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் சுபாஷ் மற்றும் கூட்டாளி மோட்டார் சைக்கிளில் நாடகமாடி செல்போன் திருட்டு செய்து எஸ்கேப் ஆன சம்பவம் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Rapid Read
செல்போன் திருடிய திருடர்கள்செல்போன் திருடிய திருடர்கள்
செல்போன் திருடிய திருடர்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நடைபெற்ற செல்போன் திருட்டு சம்பவம், இப்படியும் கூட நடக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் தன்னுடைய சட்டை பையில் செல்போனுடன் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இதைக் கவனிக்க இன்று எப்படியாவது அந்த செல்போனை ஆட்டைய போட்டு விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அதன்படி தன்னுடைய மோட்டார் சைக்கிளை திருப்பிச் செல்ல முயல்வது போல் நடித்தார். அப்போது, வாகனம் வழுக்கிக் கொண்டு கீழே விழப் போவது போல் நாடகமாடிய அவர், ஐயா யாராவது வந்து உதவி செய்யுங்க எனக் கூறியிருக்கிறார்.  செல்போனுடன் சென்ற நபர் உடனடியாக ஓடோடிச் சென்று அந்த இளைஞருக்கு உதவ முயன்றார்.

அப்போது அந்த பைக் ஆசாமியின் கூட்டாளியும் அதே பகுதியில் எதார்த்தமாக நடந்து செல்வது போல் அங்கு ஓடி வந்துள்ளார். கூட்டாளியும் உதவுவது போல் நடிக்க அந்த கேப்பில் செல்போனை உருவி விட்டனர். அதன்பிறகு பைக் இளைஞரும் கூட்டாளியும் ஒரே பைக்கில் ஏறி எஸ்கேப் ஆகி விட்டனர். உதவி செய்தவர் 5 அடி நடந்து சென்ற பின் சட்டைப் பையில் ஏதோ வெயிட் குறைகிறதே என குனிந்து பாக்கெட்டைப் பார்க்க செல்போன் மாயமானது கண்டு அதிர்ந்து போனார்.

பின்னால் திரும்பிப் பார்த்தால் திருடர்கள் இருவரும் பைக்கில் சிட்டாக பறந்து கொண்டிருந்தனர். சில நொடிகளில் அரங்கேறிய இந்த நூதன திருட்டு சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து செல்போனை இழந்தவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், செல்போன் திருட்டு நாடகத்தை அரங்கேற்றி தப்பி சென்ற நபரின் பெயர் சுபாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த சுபாஷை போலீசார் தற்போது தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். உதவி கோரி செல்போனை உருவிச் சென்ற இந்த நூதன திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

August 28, 2025 7:40 PM IST

Read More

Previous Post

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

Next Post

உயர் நீதிமன்றம் யோவுக்கு நஷ்டஈடு செலுத்துவதை நிறுத்தி வைக்க விரிவுரையாளர் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது

Next Post
உயர் நீதிமன்றம் யோவுக்கு நஷ்டஈடு செலுத்துவதை நிறுத்தி வைக்க விரிவுரையாளர் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது

உயர் நீதிமன்றம் யோவுக்கு நஷ்டஈடு செலுத்துவதை நிறுத்தி வைக்க விரிவுரையாளர் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin