• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இன்ஸ்டா போஸ்டில் கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா | Dubai Princess Shaikha Mahra Divorces Husband In Insta Post

GenevaTimes by GenevaTimes
July 17, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இன்ஸ்டா போஸ்டில் கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா | Dubai Princess Shaikha Mahra Divorces Husband In Insta Post
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை, இன்ஸ்டா போஸ்ட் மூலம் விவாகரத்து செய்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார்.

ஷைக்கா மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மஹ்ராவின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு முன் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, இளவரசி மஹ்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு ரகசிய பகிர்வை வெளியிட்டிருந்தார். தனது குழந்தையை அரவணைத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்த அவர், அதன் கீழ் “நாங்கள் இருவர் மட்டும்” என்று எழுதி இருந்தார். இதன்மூலம், மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வது என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார் என்பதை உணர்த்துவதாக இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ள மஹ்ரா, மேலும் முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.



Read More

Previous Post

விராட் கோலிக்கு மரியாதை கிடைக்காது – அமித் மிஸ்ரா ஒபன் டாக்!

Next Post

சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

Next Post
சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin