Last Updated:
மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல் நலக்குறைவு திடீரென்று ஏற்பட்டதாக கூறி அவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் புகைப்படங்களை அவரது முன்னாள் காதலர் முச்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இறுதிக்கட்ட நேரத்தில் இருவருக்கும் இடையிலான திருமணம் தடைபட்டிருந்த சூழலில், தற்போது பலாஷ் முச்சலுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்துள்ளன. இந்த சூழலில் அவர் ஸ்மிருதி மந்தனாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.
இருவரும் சில ஆண்டுகளாக டேட்டிங்கில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி இருவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. கடைசி நேரத்தில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல் நலக்குறைவு திடீரென்று ஏற்பட்டதாக கூறி அவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதன் பின்னர் முச்சல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்து ஸ்மிருதி மந்தனாவை ஏமாற்றி விட்டார் என புகார்கள் வெளிவரத் தொடங்கின.
அதன் பின்னர் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். தற்போது ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழலில் திருமணம் தடைபடுவதற்கு சற்று முன்பாக பலாஷ் முச்சல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததாக மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


