காதலுக்கு வயது இல்லை என்பார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. 80 வயது முதியவர் ஒருவர் 34 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள மகாரியா என்ற சிறிய கிராமம் உள்ளது. வெறும் 100 வீடுகளை கொண்ட இந்த கிராமத்தை சேர்ந்த பாலுராம் என்ற முதியவர் கடந்த 2 ஆண்டுகளாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். பாலுராமின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததால் கடன் தொல்லையால் பாலுராம் கடன் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விஷ்ணு குர்ஜார் என்ற இளைஞருடன் சேர்ந்து ஒரு சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். அவரது நிலையைப் பார்த்த விஷ்ணு, பாலுராமை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் இணையத்தில் வைரலானதை அடுத்து விஷ்ணு, பாலுராமை வைத்து மேலும் ஒரு ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த வீடியோவும் வைரலாகவே கிராமத்தில் உள்ள அனைவரும் பாலுராமிடம் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்த பாலுராம் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினார்.
இணையத்தில் பிரபலமானாலும் பாலுராமுக்கு ஆண்ராய்டு மொபைலை பயன்படுத்த தெரியாது. விஷ்ணு தான் பாலுராமுக்கு உதவி செய்வார். அவ்வாறு பாலுராம் இன்ஸ்டாகிராமில் ஷீலா என்ற இளம் பெண்ணிடம் பேச தொடங்கியுள்ளார். அவர் சொல்வதை விஷ்ணு அப்படியே டைப் செய்து அந்த பெண்ணிற்கு அனுப்பி வந்தார். இருவருக்கும் இடையேயான இந்த உரையாடல் மெல்ல மெல்ல காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : “கொத்தடிமை போல் நடத்துகின்றனர்..” காவல்நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் புகார்!
இந்நிலையில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த இருவரும் நீதிமன்றத்தில், முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கோயிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களின் காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
