Last Updated:
கேரளாவில் இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்த ஃபாஹித் கைது. புகாரின் பேரில் பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
கேரளாவில் இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்த நடன இயக்குநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 27 வயதான ஃபாஹித். இன்ஸ்டாவே உலகம் என கதியாக கிடந்தவர் நடன இயக்குனர் என கூறி கொண்டு விதவிதமான புகைப்படங்களை அப்லோடு செய்தும், ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் வெளியிட்டும் தன்னை தானே ஹீரோ போல விளம்பரப்படுத்தி வந்தார். இவரின் கலர்புல் இன்ஸ்டா போஸ்டுகளை பார்த்து, தன்னுடைய வலையில் விழும் இளம்பெண்களிடம் காதல் மொழி பேசி கல்யாண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
தன்னிடம் பேசும் பெண்களை தனிமையில் வரவழைத்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண்களில், டெக்னோபார்க்கில் பணிபுரியும் ஐடி ஊழியரும் ஒருவர். காதலிப்பதாகவும் கடைசி வரை கூட இருப்பேன் என்றும் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் ஃபாஹித் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, புகைப்படங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த பகீர் புகாரின்பேரில் ஃபாஹித்தை கைது செய்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பிடிபட்டதும் செல்போனை பிடுங்கி வைத்த போலீசார் அதில் ஆய்வு செய்ய ஏராளமான பெண்களின் போட்டோக்களும், வீடியோக்களும் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
ஃபாஹித்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? இவருக்கு பின்னால் வேறு யாரேனும் இருக்கிறார்களா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்த இளைஞர் கைதாகி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
June 10, 2025 4:04 PM IST
இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு வலைவீசி பாலியல் வன்கொடுமை.. நெருக்கமான வீடியோவை காட்டி மிரட்டல்.. நடன இயக்குநர் கைது!


