• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது.. போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது.. போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 14, 2025 4:19 PM IST

இன்ஸ்டா பிரபலம் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் பண மோசடியில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சந்தீபாசந்தீபா
சந்தீபா

பண மோசடி வழக்கில் இன்ஸ்டா பிரபலம் சந்தீபாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம் பிரபலம் சந்தீபா விர்க். இவர் தன்னை தொழில்முனைவோர் மற்றும் நடிகை என கூறி சுற்றிவந்துள்ளார். தன்னை hyboocare.com என்ற வலைதளத்தின் உரிமையாளர் என அடையாளப்படுத்தி உள்ளார். இந்த வலைதளத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளார். அத்துடன், அழகுக் கலை தொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தான் ஒரு நடிகை என்று கூறியதை ஃபாலோயர்கள் நம்ம வேண்டும் என்பதற்காகவே, போட்டோ ஷூட் எடுத்த வீடியோக்களை இணையத்தில் அள்ளிப் போட்டுள்ளார். இதன் காரணமாகவே சந்தீபாவின் இன்ஸ்டாகிராரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, மொகாலியில் உள்ள காவல் நிலையத்தில் சந்தீபா மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இது, அமலாக்கத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.

உடனே, அவரை விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், சந்தீபா கூறிய, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் இணையதளம் முறையாக செல்படவில்லை என்பது தெரியவந்தது. அதில், அவர் தனது விவரங்களை முறையாக பதிவிடாமல் பலரையும் ஏமாற்றி வந்தது அம்பலமானது. தொழில்முனைவோர் என கூறிய சந்தீபா, எந்த வகையில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வீடு மற்றும் அசையா சொத்துகளை வாங்கினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையடுத்து, 40 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவரை, அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும், வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் , நடராஜன் சேதுராமன் என்பவருடன் சந்தீபாவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் தான் இன்ஸ்டா பிரபலத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தனக்கும், சந்தீபாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று நடராஜன் சேதுராமன் தெரிவித்துள்ளார். இருந்த போதும், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இளம்பெண், கோடிக்கணக்கில் எப்படி மோசடி செய்தார் என தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், முக்கியப்புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 14, 2025 4:19 PM IST

Read More

Previous Post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு

Next Post

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு | Chief Minister trophy Online registration deadline extended

Next Post
முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு | Chief Minister trophy Online registration deadline extended

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு | Chief Minister trophy Online registration deadline extended

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin