மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில், சுமார் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கோரிக்கை
இந்நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

&w=1200&resize=1200,675&ssl=1)