முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மகாதீர் தொடர்ந்து நல்வாழ்வு, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்று தானும் தனது மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இடைவிடாத சேவையும் வயதாகி வரும் நமது நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. ஆனால் இன்னும் பெரும் நம்பிக்கையை கொண்டுள்ளது. கடவுள் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக என்று பிகேஆர் தலைவரும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவருமான அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, முன்னாள் பிஎச் தலைவரின் 100ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, மலேசியாவின் வளர்ச்சி மற்றும் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக அவரை விவரித்தார். பாலஸ்தீனியர்களின் அவலநிலை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து, சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்ததற்காக மகாதீரை அமானாவின் தலைவர் முகமது பாராட்டினார்.
நூறு ஆண்டுகள் என்பது ஒரு அசாதாரண காலம். இது கொள்கைகளில் உறுதியையும் தேசத்திற்கான அசாதாரண அர்ப்பணிப்பையும் குறிக்கிறது என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார். இதற்கிடையில் டிஏபியின் இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவ் துன் டாக்டர் மகாதீரின் 100ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மகாதிர் 1981 முதல் 2003 வரை தேசிய முன்னணி (BN) அரசாங்கத்தை வழிநடத்தினார். மேலும் பிஎன்-ஐ அதிகாரத்திலிருந்து கவிழ்க்க உதவிய பின்னர் மே 2018 முதல் பிப்ரவரி 2020 வரை பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் உயர் பதவியை வகித்தார்.
நான்காவது பிரதமராக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக மலேசியாவின் “நவீனமயமாக்கலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். இதில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், கேஎல் டவர், கேஎல்ஐஏ, நாட்டின் நிர்வாக மையமாக புத்ராஜெயா போன்ற சின்னமான உள்கட்டமைப்பு திட்டங்கள் அடங்கும்.
அப்போதைய முன்னாள் துணைப் பிரதமராக இருந்த அன்வார், அதே போல் ஒற்றுமை அரசாங்கத்தில் முக்கிய அங்கமான பக்காத்தான் ஹராப்பானையும் அம்னோவையும் அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.