
பேருந்துப் பயணிகளுக்கான கட்டண செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் இன்று இருந்து நடைமுறைக்கு வருகிறது. இனிமேல் பயணிகள் தங்கள் வங்கி அட்டைகள் மூலம் நேரடியாக பேருந்துக் கட்டணத்தை செலுத்த முடியும்.
இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்து துறையில் மேலும் ஒரு டிஜிட்டல் முன்னேற்றம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

