Last Updated:
மும்பை மாநகராட்சி உள்ளிட்ட மராட்டியத்தின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர், நாசிக், சோலாப்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது.
1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மும்பை மாநகராட்சியை ஒன்றிணைந்த சிவசேனாவே ஆட்சி செய்து வந்தது. சிவசேனா ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரு அணிகளாக உள்ள நிலையில், ஷிண்டே ஆளும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடுகிறார்.
உத்தவ் தாக்கரே, நீண்ட நாள் பகையை மறந்து ஒன்றுவிட்ட சகோதரர் ராஜ் தாக்கரேவுடன் இணைந்து போட்டியிடுகிறார். ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள தேசிய வாத காங்கிரஸும் தனித்தே களம் இறங்குகிறது.
அந்தவகையில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர், நாசிக், சோலாப்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. 227 இடங்களுக்கு ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் போட்டியிடும் நிலையில், காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
Mumbai,Maharashtra


