Last Updated:
தொடக்க நிலை பொது பங்கு வெளியீடு நிறைவடைந்த நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன.
தொடக்க நிலை பொது பங்கு வெளியீடு நிறைவடைந்த நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனம் முதல்முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. ஒரு பங்குக்கு 1,119 ரூபாய் என்ற விலையில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான முன்பதிவில், திட்டமிட்டதில் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, பங்குகள் ஒதுக்கீட்டுப் பணிகள் நேற்று இறுதிசெய்யப்பட்டன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவன பங்குகள் இன்று காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட உள்ளன.
பங்குகளைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், அதனைப் பெற முடியாதவர்கள், பங்குச்சந்தை மூலம் பெற முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், ஜியோ ஃபிளாட்பார்ம் பங்கு விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


