இன்று நள்ளிரவு முதல் ரயில்களை இயக்குவதிலிருந்து வாபஸ் பெற ரயில் இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட ரயில் இயக்குநர்களுக்கான சந்திப்பொன்றில், இராணுவ அதிகாரிகளை ரயில் இயக்குநர்களாக பணிக்கமர்த்துவதற்கான பயிற்சிக்கு முன்மொழியப்பட்டதை ஏற்கெனவே உள்ள இயக்குநர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ரயில் சேவைகளிலிருந்து இன்று நள்ளிரவு முதல் வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக ரயில் இயக்குநர்கள் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
