நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் இன்று தொடங்கும் நிலையில், மூன்றாவது வீரராக இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன் ஒரு நாள் தொடரில் 2-க்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டி தொடங்க உள்ளது.
இந்த போட்டிகள் ஆப் மற்றும் டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த மேட்ச்சை ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் இந்த மேட்ச்சை நேரலையாக வழங்குகின்றன.
இந்தியா அணி விபரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மற்றும் ரவி பிஷ்னோய்.
நியூசிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, சாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், மற்றும் இஷ் சோதி.

