Last Updated:
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இன்று காலை விருந்து அளிக்கும் சித்தராமையா, அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா இன்று விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவில் 2023ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சித்தராமையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி தலைமையை விட்டுக் கொடுப்பதாக சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. அதன்படி, கடந்த நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சித்தராமையா பதவி விலகி, டிகே சிவகுமார் பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கினர்.
இந்நிலையில், தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இன்று காலை விருந்து அளிக்கும் சித்தராமையா, அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. சித்தராமையாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மகன் யதீந்திர சித்தராமையாவுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


