இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது” என்று தீர்ப்பு வழங்கினர்.
இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்.
இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது.
ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே!

