• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Infosys Appoints Ashish Kumar Das as New CEO: Salil Parekh to Step Down After 9-Year Tenure

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Infosys Appoints Ashish Kumar Das as New CEO: Salil Parekh to Step Down After 9-Year Tenure
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..?

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சலில் பரேக்-ன் பதவிக்காலம் முடியும் வேளையில், புதிய தலைவரை தேடும் பணியில் கடந்த சில மாதங்களாக இன்போசிஸ் மிகவும் திவிரமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம் புதிய சிஇஓ தேர்வானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக ஜனவரி மாதம் 2018 முதஸ் சலில் பரேக் இருக்கிறார், விஷால் சிக்கா நியமனம் செய்யப்பட்ட போது உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் நிர்வாகத்தையும், வர்த்தகத்தையும் சிறப்பாக நிர்வாகம் செய்தவர் சலில் பரேக்.

இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..?

இவருடைய பதவி காலம் 2027ஆம் ஆண்டு மார்ச் 31 உடன் முடிவடைகிறது, ஏப்ரல் 1ஆம் தேதியுடன் இப்பதவியில் இருந்து முழுமையாக வெளியேற உள்ளார். இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் புதிய சிஇஓவாக ஆஷிஸ் குமார் தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இன்போசிஸ் தனது வருடாந்திரா நிதி அறிக்கை வெளியிடும் போதும் சரி, வருடாந்திர பொதுக்கூட்டம் நடத்தும் போதும் சரி சலில் பரேக்-ன் பணி நீடிப்பு குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்பட்டவில்லை என அறிவித்தது. ஆனால் முதலீட்டு சந்தையில் புதிய சிஇஓ நியமனம் குறித்த தெளிவின்மை, ஏஐ துறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இன்போசிஸ் பங்கு விலையை பாதித்து வந்தது. இந்த நிலையில் புதிய சிஇஓ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சலில் பரேக் தலைமையில் இன்போசிஸ் நிறுவனம் கடந்த 9 வருடத்தில் கிளவுட் கம்பியூட்டிங், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், ஏஐ துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதோடு முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக 20 பில்லியன் டாலர் அளவை தாண்டியதும் சலில் பரேக் தலைமையிலான நிர்வாகத்தில் தான்.

இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..?

யார் இந்த ஆஷிஸ் குமார் தாஸ்..?

ஆஷிஸ் குமார் தாஸ் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வீசஸ், யூடிலிட்டீஸ், ரெசோர்ஸ், எனர்ஜி, எண்டர்பிரைசர்ஸ் ஆகிய பிரிவுகளின் எக்ஸ்க்யூடிவ் வைஸ் ப்ரெசிடென்ட் மற்றும் குளோபல் ஹெட் ஆகவும் இருக்கிறார். ஆஷிஸ் குமார் தாஸ் கடந்த 30 வருடமாக இன்போசிஸ் நிறுவனத்தின் பல முக்கிய உயர் பதவிகளில் இருந்து வருகிறார்.

சிஇஓவாக நியமிக்கப்பட்ட ஆஷிஸ் குமார் தாஸ் இன்றைய அறிமுக கூட்டத்தில் பேசுகையில், ஏஐ தொழில்நுட்பம் வர்த்தக துறையை பெரிய அளவில் மாற்றியுள்ள வேளையில், புதிய AI strategy அடிப்படையில் திறன்களை வளர்த்து இந்த ஏஐ உலகில் வெல்வோம் என தெரிவித்தார். அடுத்த வருடம் மார்ச் 31 வரையில் சலில் பரெக் ஆஷிஸ் குமார் தாஸ் இணைந்து நிர்வாக மாற்றத்தை எளிதாக்குவார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி சலில் பரெக் பதவி விலக உள்ளார்.

Share This Article

English summary

Infosys Appoints Ashish Kumar Das as New CEO: Salil Parekh to Step Down After 9-Year Tenure

Infosys Appoints Ashish Kumar Das as New CEO: Salil Parekh to Step Down After 9-Year Tenure — இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..?

Story first published: Thursday, July 23, 2026, 17:59 [IST]

Other articles published on Jul 23, 2026

Read More

Previous Post

“குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்; லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வை கண்டறிவோம்” – சச்சின்

Next Post

வெளிநாடுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா நிறைவேற்றம் | Makkal Osai

Next Post
வெளிநாடுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா நிறைவேற்றம் | Makkal Osai

வெளிநாடுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா நிறைவேற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin