“சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை முதல்வர் புறக்கணிக்கிறார்”
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, “எனது ஆட்சியில் பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை என்று சட்டப்பேரவையில் கூறியவர், இதையெல்லாம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “இது எதைப் பற்றியும் துளியும் அக்கறையின்றி, நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டதாக ஒரு வீடியோ பதிவு செய்ய ஸ்டாலின் வருவார்” என கிண்டலடித்தார். அவர், ஸ்டாலினை ஆங்கிலப் படமான The Dictator படத்தின் கதாநாயகனுக்கு ஒப்பிட்டு, அவரது ஆட்சி முறையை விமர்சித்தார்.

