Last Updated:
இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும்போது நீங்கள் போதுமான டாக்குமெண்ட்கள் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது நீங்கள் வழங்கிய டாக்குமெண்ட்களில் பிழைகள் இருந்தாலோ இன்சூரன்ஸ் கிளைம் அங்கீகரிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம்.
ஆயுள் காப்பீடு என்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதற்கு உதவும் ஒரு திட்டமாகும். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருடைய இன்சூரன்ஸ் கிளைம் தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதனால் மன உளைச்சல் இன்னும் அதிகமாவதோடு பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். எனவே எந்தெந்த காரணங்களால் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படலாம் என்பதை விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் பாலிசி வாங்கும் சமயத்தில் நீங்கள் வழங்கிய தவறான அல்லது நிறைவுறாத ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள். ஒருவேளை உங்களுக்கு பாலிசியை வாங்குவதற்கு முன்பே டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது பாலிசி காலத்தில் நீங்கள் புகைப்பிடித்துக் கொண்டிருந்தாலோ அதனால் உங்களுடைய கிளைம் நிராகரிக்கப்படலாம். எனவே பாலிசி வாங்கும்போது உங்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் வெளிப்படையாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிப்பது அவசியம்.
உங்களுடைய பாலிசி நிராகரிக்கப்படுவதற்கான மற்றும் ஒரு முக்கியமான காரணம் இது. ஒருவேளை உங்களுடைய பிரீமியம் பேமெண்ட் செலுத்துவதற்கு நீங்கள் தவறினாலோ அல்லது தாமதித்தாலோ அடுத்த முறை நீங்கள் செய்யும் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படலாம். எனவே இன்சூரன்ஸ் பிரீமியம்
செலுத்த வேண்டிய தேதிகளை கவனமாக குறித்து வைத்து, பேமெண்ட்களை முறையாக செலுத்துங்கள்.
இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும்போது நீங்கள் போதுமான டாக்குமெண்ட்கள் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது நீங்கள் வழங்கிய டாக்குமெண்ட்களில் பிழைகள் இருந்தாலோ அதனால் இன்சூரன்ஸ் கிளைம் அங்கீகரிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம். இறப்பு சான்றிதழ், மருத்துவமனை சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகள் மற்றும் அடையாள சான்றிதழ்களை நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் பிழை இல்லாமல் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறை சுமூகமானதாக மாறும்.
இறப்பானது பாலிசியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விலக்குகளுக்குள் அடங்கும்போது, அதாவது பாலிசியின் முதல் ஆண்டில் தற்கொலை செய்து கொள்ளுதல், தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட இறப்பு போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் உங்களுடைய இன்சூரன்ஸ் கிளைமை நிராகரிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்டு. இது அனைத்துமே நீங்கள் பாலிசி வாங்கும் சமயத்தில் உங்களுக்கு விளக்கமாக கூறப்பட்டிருக்கும். எனவே ஒரு பாலிசியை வாங்கும்போது கட்டாயமாக நீங்கள் பாலிசி ஆவணத்தை கவனமாக படிக்க வேண்டும்.
*பாலிசிதாரர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் எப்பொழுதும் சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
*பாலிசி பிரீமியம் பேமெண்ட்களை முறையாக செலுத்த வேண்டும் மற்றும் பாலிசி குறித்த விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவிப்பதும் அவசியம்.
*நிறுவனத்தின் கிளைம் சம்பந்தப்பட்ட செயல்முறை பற்றி தெரிந்து கொள்வது மற்றும் தேவையான அனைத்து டாக்குமெண்ட்களையும் வைத்திருப்பதும் முக்கியம்.
*அதிக கிளைம் செட்டில்மெண்ட் விகிதங்கள் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேர்வு செய்வதன் மூலமாக உங்களுடைய இன்சூரன்ஸ் கிரைம் உடனடியாகவும், வெற்றிகரமாகவும் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
October 14, 2025 2:23 PM IST


