
Last Updated:
கோவிந்தன் ரங்கராஜன், சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த நபரை சாதிய ரீதியில் அவமானப்படுத்திய புகாரில் இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போவி பழங்குடியினத்தைச்சேர்ந்த துர்க்கப்பா என்பவர் இந்திய அறிவியல் மையத்தில் 2014ஆம் ஆண்டு பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு, போலியான பாலியல் புகார் தம்மீது அளிக்கப்பட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் துர்க்கப்பா சதாசிவநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் சாதியரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் துர்க்கப்பா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது பணிநீக்கம் குறித்து இந்திய அறிவியல் மையமோ, அதன் அறங்காவலர் குழுவில் இருந்த சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட யாரும் எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து கோவிந்தன் ரங்கராஜன், சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
January 28, 2025 3:21 PM IST

