புதிய முறையில், வாகன விற்பனையாளர்களே வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையான ஆவணங்களை பெற்று, ‘Vaahan’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியும் ஆன்லைனில் செலுத்தப்பட்டவுடன், வாகனப் பதிவு சான்றிதழ் உருவாகும். இதனால், நேரடி ஆவணச் சோதனைகளும், இடையூறு விளைவிக்கும் வரிசைகளும் முற்றிலும் தவிர்க்கப்படும்.


