Last Updated:
இலவச ட்ரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த சேவிங்ஸ் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கும் பொருந்தும். முன்னதாக இலவச லிமிட்டை தாண்டி கேஷ் வித்ட்ராயல் செய்யும் கஸ்டமர்களிடம் ஒவ்வொரு ட்ரான்சாக்ஷனுக்கும் 21 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
மே 1-ம் தேதியில் இருந்து அடிக்கடி ATM பயன்படுத்தும் நபர்கள் இனி கூடுதல் கட்டணங்களை செலுத்துவதற்கு சற்று தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ATM சார்ஜ் கட்டணத்தை தற்போது அதிகரித்துள்ளது.
மாற்றப்பட்டுள்ள ATM கட்டணங்கள் யாவை?
மே 1, 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின் கீழ், கஸ்டமர்கள் இனி இலவச வித்ட்ராயல் லிமிட்டை விட ATM இல் இருந்து வித்ட்ரா செய்யும் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் இனி கூடுதலாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் கஸ்டமர்களுக்கு ATMல் இருந்து பணத்தை வித்ட்ரா செய்வதற்கு இலவசமாக லிமிட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த இலவச லிமிட்டை தாண்டி பணத்தை வித்ட்ரா செய்யும் போது இதுவரை 21 ரூபாய் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் வசூல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இனி இந்த கட்டணம் 23 ரூபாயாக அதிகரிகப்பட்டுள்ளது.
இலவச ATM ட்ரான்ஸ்ஷாக்ஷன்:
*ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட வங்கி ATMல் இருந்து பணம் எடுப்பதற்கு 5 இலவச ATM ட்ரான்ஸாக்ஷன்கள்
*மெட்ரோ நகரங்களில் உள்ள பிற வங்கி ATMகளில் 3 இலவச ட்ரான்ஷாக்ஷன்
*மெட்ரோ அல்லாத நகரங்களில் பிற வங்கி ATMகளில் 5 இலவச ட்ரான்ஸாக்ஷன்கள்
இலவச ட்ரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த சேவிங்ஸ் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கும் பொருந்தும். முன்னதாக இலவச லிமிட்டை தாண்டி கேஷ் வித்ட்ராயல் செய்யும் கஸ்டமர்களிடம் ஒவ்வொரு ட்ரான்சாக்ஷனுக்கும் 21 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இது 2022 ஆண்டு முதலில் இருந்து அமல்படுத்தப்பட்டது.
இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் என்பது கஸ்டமர்கள் தங்களுடைய இலவச ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை கடக்கும் போது மட்டுமே அமலாகும். அதாவது ஒரு மாதத்திற்கு மெட்ரோ நகரங்களில் உள்ள பிற வங்கி ATMகளில் 3 இலவச ட்ரான்ஸாக்ஷன்களும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 இலவச ட்ரான்சாக்ஷன்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ATM கட்டணத்தில் செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய பரிந்துரைகளின் பெயரில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ள முடிவாகும். மேலும் ஒயிட் லேபிள் ATM ஆபரேட்டர்கள் மற்றும் வங்கிகள் இந்த மாற்றப்பட்ட விலையை மே 1ம் தேதி முதலில் இருந்து அமல்படுத்துவார்கள். இந்த ட்ரான்ஷாக்ஷன் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு சிறு வங்கிகளை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும். ஏனெனில் இவர்களிடம் குறைவான எண்ணிக்கையில் ATMகள் உள்ளன மற்றும் இவர்களுடைய கஸ்டமர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதற்கு பெரிய வங்கிகளின் ATMகளை நம்பி இருக்கின்றனர். இதன் விளைவாக பணத்தை வித்ட்ரா செய்வதற்கும், பேலன்ஸ் சரி பார்ப்பதற்கும் ஹோம் பேங்க் நெட்வொர்க் தவிர வெளி பேங்க் ATMகளை பயன்படுத்தும் போது அதற்கு ஆகக்கூடிய கட்டணம் அதிகமாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 7:44 PM IST


