இந்த நிலையில், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அசாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால், வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில், இது பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


