ஏப்ரல் 21, 2025 வெளியிடப்பட்ட சீரமைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், வங்கிகள் இனி சிறார்கள் சுயமாக வங்கி கணக்குகளை நிர்வகிப்பதற்கு அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு வங்கியின் ரிஸ்க் பாலிசிக்கு உட்பட்டு ஒரு சில வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக இளம் கஸ்டமர்களுக்கு ஏற்ப வங்கி அமைப்பு எவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
புதிய விதிமுறைகளின் முக்கியமான அம்சங்கள்:
எந்த வயதினரும் மைனர் அக்கவுன்டுகளை திறக்கலாம்:
உண்மையான அல்லது சட்டரீதியான பாதுகாவலர் மூலமாக எந்த வயது சிறார்களும் இனி சேமிப்பு மற்றும் டேர்ம் டெபாசிட் அக்கவுன்டுகளை திறந்து இயக்குவதற்கு வங்கிகள் அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது மாதிரியான அக்கவுன்டுகளுக்கு தாய்மார்கள் பாதுகாவலர்களாக இருக்கலாம் என்பதை மீண்டும் RBI உறுதிப்படுத்தியுள்ளது.
10 வயது முதலில் இருந்தே அக்கவுன்ட்டை சுயமாக இயக்கலாம்:
10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட சிறார்கள் தாமாகவே சுயமாக அக்கவுன்டுகளை திறந்து, அதனை இயக்கலாம். மேலும், இதற்குரிய வரம்புகள் மற்றும் விதிகளானது அந்தந்த வங்கிகளைப் பொறுத்து அமையும். குறிப்பிட்ட அந்த வங்கியின் உட்புற அபாய நிர்வகிப்பு பாலிசிகளின் அடிப்படையில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படும். இந்த விதிகள் அக்கவுன்ட் ஹோல்டரிடம் தெளிவாக விளக்கி கூறப்பட வேண்டும்.
மேஜரான பிறகு:
18 வயதை அடைந்த பிறகு வங்கிகள் மீண்டும் குறிப்பிட்ட அந்த அக்கவுன்ட் ஹோல்டர்களிடம் கையெழுத்துக்கள் மற்றும் அக்கவுன்டை இயக்குவது சம்மந்தமான விதிமுறைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை அக்கவுன்ட் பாதுகாவலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தால், அதில் இருக்கும் பேலன்ஸ் தொகை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த மாற்றம் சுமூகமாக நடைபெறுவதற்கு வங்கிகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவுறுத்துகிறது.
இதையும் படிக்க: மூத்த குடிமக்கள் வருமான வரிக் கணக்கை எவ்வாறு தாக்கல் செய்வது…? விரிவான வழிகாட்டி இதோ…
நவீன பேங்கிங் கருவிகள்:
ரிஸ்க் பாலிசிகளுக்கு உட்பட்டு இன்டர்நெட் பேங்கிங், ATM அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் செக் புக் போன்றவற்றை மைனர் அக்கவுன்ட் ஹோல்டர்களுக்கு வங்கிகள் வழங்கலாம்.
ஓவர் டிராஃப்ட்கள் வழங்கக் கூடாது:
சிறார்கள் தாமாகவோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ அக்கவுன்ட்டை இயக்கினாலும், மைனர் அக்கவுன்டுகள் எப்போதும் கிரெடிட்டில் இருக்க வேண்டும் மற்றும் அதனை ஓவர் டிரா செய்யக்கூடாது.
KYC செய்வது கட்டாயம்:
மைனர் அக்கவுன்டுகளை திறக்கும்போது வங்கிகள் KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரயில்களிலும் வந்தாச்சு ஏடிஎம் வசதி…!
இந்த விதிகள் அனைத்து கமர்ஷியல் வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இதற்கு தகுந்தார் போல தங்களுடைய பாலிசிகளை மாற்றி அமைக்கும்படி, வங்கி நிறுவனங்களுக்கு RBI ஜூலை 1, 2025 வரை கால அவகாசம் அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 25, 2025 5:09 PM IST
இனி 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சுயமாக பேங்க் அக்கவுன்ட்டை இயக்கலாம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட RBI…!

