• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இனி ரூ.10 லட்சம் இல்ல ரூ.20 லட்சம்… மத்திய அரசு சொன்ன இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இனி ரூ.10 லட்சம் இல்ல ரூ.20 லட்சம்… மத்திய அரசு சொன்ன இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதம மந்திரி முத்ரா திட்டத்திற்கான (PMMY) கடன் வரம்பை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு அதிகரித்துள்ளதாக அக்.25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முத்ரா கடன்களுக்கான அதிகரிக்கப்பட்ட இந்த கடன் வரம்பு குறித்து ஜூலை 23ஆம் தேதி அன்று நடைபெற்ற 2024-25 மத்திய பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

“பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் முத்ரா கடன்களுக்கான வரம்பு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முத்ரா திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கு கூடுதல் உதவியாக இருக்கும்” என்று அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

வளர்ந்து வரும் தொழிலதிபர்களை ஆதரிப்பதற்காகவும், அவர்களுடைய தொழிலை இன்னும் விரிவுபடுத்துவதற்கு உதவுவதற்காகவும் இந்த முடிவு குறிப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தருண் பிளஸ் என்ற புதிய பிரிவின் கீழ் 10 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள் கிடைக்கும். தருண் பிரிவின் கீழ் இதற்கு முன்பு கடன்களை பெற்ற தொழிலதிபர்கள் அதனை சரியாக திருப்பி செலுத்தி இருக்கும் பட்சத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முத்ரா கடனை பெறுவதற்கான தகுதி வரம்புகள் யாவை?

முத்ரா கடன் என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசு கடன் திட்டம் ஆகும். இது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கான கடன் உதவியை வழங்கி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு ஒரு சில தகுதி வரம்புகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கார்ப்பரேட் அல்லாத சிறு தொழில்கள், குறு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி, வணிகம், சேவை மற்றும் விவசாயம் சார்ந்த பிரிவுகளில் உள்ள தனிநபர்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
தினமும் வேலைக்கே போகாமல் மாதந்தோறும் பணம் சம்பாதிக்கலாம்.. ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும்!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டம் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன்களை வழங்குவதற்காக ஏப்ரல் 8, 2015ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன்கள் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைகள் மூலமாக குறு அல்லது சிறு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் நபர்களுக்காக கிடைக்கிறது.

விளம்பரம்

வேலைவாய்ப்பை இந்தியாவில் இருந்து ஒழித்து கட்டுவதற்காகவே மத்திய அரசு இந்த மாதிரியான ஒரு கடன் உதவியை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் சாமானிய மக்கள் கூட தொழில் முனைவோராக மாறுவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. அதுமட்டுமல்லாமல் சிறு தொழில் செய்து வரும் வணிகர்கள் தங்களுக்கான பண தேவைகளை இந்த கடனுதவி மூலம் பூர்த்தி செய்து தங்களுடைய தொழிலை விரிவுப்படுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாம்.

இதையும் படிக்க: லட்சக்கணக்கில் சம்பளம்.. ஆனாலும் இந்த வேலையை செய்ய யாரும் விரும்புவதில்லை! – ஏன் தெரியுமா?

விளம்பரம்

பொதுவாக கடன் என்பது அத்தாட்சி அல்லது உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்படாது. ஆனால் இந்த திட்டத்தை பொறுத்தவரை, அந்த மாதிரியான எந்த விஷயமும் உங்களுக்கு தேவையில்லை. தனி நபர் மற்றும் தொழில் பற்றிய சில தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை வழங்கினாலே இந்த திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

.

Read More

Previous Post

Delhi Pollution | தலைநகர் டெல்லியை உலுக்கும் காற்று மாசு… கட்டுப்பாடு நடவடிக்கைகள் என்ன? – News18 தமிழ்

Next Post

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Harini Amarasuriya Reappointed As Sri Lanka Prime Minister

Next Post
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Harini Amarasuriya Reappointed As Sri Lanka Prime Minister

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Harini Amarasuriya Reappointed As Sri Lanka Prime Minister

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin