நம்மில் பலருக்கு ரயில் பயணம் என்பது மிகவும் ஃபேவரட்டான ஒன்று. ஆனால் ரயிலில் இடம் கிடைக்காமல் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்டு பயணிப்பது நமது அனுபவத்தை மிகவும் மோசமானதாக மாற்றிவிடும். இதனால் திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்து விடுவது நல்லது. ஆனால் இந்த சலுகைகள் அனைத்தும் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கடைசி நேரத்தில் புக்கிங் செய்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக நிலவி வரும் இந்த பிரச்சனைக்கு IRCTC ஒரு அற்புதமான வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டுதல் :
-
நீங்கள் ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்யும்போது உங்களுக்கு விருப்பமான இருக்கையை தேர்ந்தெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவீர்கள். ஆனால் காலியான இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்தே இந்த ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும்.
-
ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ IRCTC வெப்சைட்டில் லாகின் செய்ய வேண்டும்.
-
லாகின் செய்த பிறகு ‘Book Your Ticket’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் எங்கிருந்து எங்கு பயணிக்க விரும்புகிறீர்கள் என்ற முகவரி, பயணத் தேதி, பயணம் செய்ய விரும்பும் வகுப்பு மற்றும் பயணிக்க விரும்பும் ரயில் போன்றவற்றை என்டர் செய்ய வேண்டும்.
-
அதன் பிறகு ‘Book Now’‘என்பதை கிளிக் செய்து, பயணியின் விவரங்கள், மொபைல் நம்பர், கேப்சா கோடு போன்றவற்றை என்டர் செய்து, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI அல்லது பிற ஆன்லைன் வழிகள் மூலமாக பேமெண்ட் செலுத்த வேண்டும்.
இந்த படிகளை நிறைவு செய்த பிறகு டிக்கெட் விபரங்கள் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
காலியான ரயில் இருக்கைகள் என்னென்ன என்பதை எளிமையான முறையில் தெரிந்து கொள்வதற்கு IRCTC ஒரு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புக்கிங் செய்யப்பட்ட (booked), காலியான (vacant) அல்லது பாதி அளவு புக்கிங் செய்யப்பட்ட (partially booked) இருக்கைகள் வெவ்வேறு கலர் நிறங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதையும் படிக்க:
பெண் பிள்ளை வைத்திருப்போர் கவனத்திற்கு.. ரூ.70 லட்சம் ரிட்டன் கிடைக்கும் இந்த திட்டம் தெரியுமா?
ரயிலில் உள்ள காலி இருக்கைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றலாம்:
-
IRCTC வெப்சைட்டில் தற்போது ‘Charts/Vacancy’ என்ற புதிய ஆப்ஷனை காண்பீர்கள்.
-
ரயில் எண், பயண தேதி மற்றும் நீங்கள் புறப்பட இருக்கும் ஸ்டேஷன் போன்ற பயண விவரங்களை வழங்க வேண்டும்.
-
Get Train Chart now என்பதை கிளிக் செய்யவும். இது காலியான இருக்கைகளின் விவரங்களோடு ரிசர்வேஷன் அட்டவணையை உங்களுக்கு காண்பிக்கும்.
-
அதன் பிறகு வகுப்புவாரியான மற்றும் கோச் வாரியான காலி பெர்த்துகள் காண்பிக்கப்படும்.
-
ஒரு குறிப்பிட்ட கோச்சை கிளிக் செய்வதன் மூலமாக பெர்த் வாரியான அமைப்பையும் நீங்கள் பார்க்கலாம்.
இதையும் படிக்க:
மாதம் 30,000 ரூபாய் முதலீடு செய்தால் 21 லட்சம் ஈட்டித்தரும் தபால் நிலையத்தின் RD திட்டம்!!!
IRCTC அப்ளிகேஷன் பயன்படுத்தி காலியாக இருக்கும் ரயில் இருக்கைகளை கண்டுபிடிப்பது எப்படி?
-
உங்கள் மொபைல் போனில் உள்ள அதிகாரப்பூர்வ IRCTC அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும்.
-
ட்ரெயின் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
-
Chart Vacancy என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
-
ரயில் பெயர் அல்லது எண் மற்றும் நீங்கள் புறப்படும் ஸ்டேஷனை என்டர் செய்யவும்.
-
காலியான இருக்கைகளின் எண்ணிக்கையோடு காலியான பெர்த்துகளை இப்போது உங்களால் காண முடியும்.
இந்த விபரங்களை பெறுவதற்கு நீங்கள் IRCTC அப்ளிகேஷனில் லாகின் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
