• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“இனி ரசாயன உரமே தேவையில்லை!” – வெறும் 2 டன் மண்புழு உரம் போதும், ஏக்கருக்கு அமோக மகசூல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
“இனி ரசாயன உரமே தேவையில்லை!” – வெறும் 2 டன் மண்புழு உரம் போதும், ஏக்கருக்கு அமோக மகசூல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 18, 2026 10:03 AM IST

மண்புழு உரத்தை ஒரு ஏக்கருக்கு 2 டன் பயன்படுத்தினால் மண் வளம் அதிகரித்து, பயிர் மகசூல் உயர்வதுடன் சாகுபடி செலவும் குறையும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

+

News18

News18

இயற்கை விவசாயத்தில் மண் வளத்தையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் மண்புழு உரம் பயன்படுத்தினால், நிலத்தின் வளம் மேம்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளார்.

மண்புழு உரம் என்பது சமையல் கழிவுகள், உலர்ந்த இலைகள், மக்கிய கால்நடை சாணம் உள்ளிட்ட கரிமக் கழிவுகளை மண்புழுக்களின் உதவியுடன் சிதைவடையச் செய்து தயாரிக்கப்படும் சிறந்த இயற்கை உரமாகும். இது மண்ணின் கரிமச் சத்துக்களை அதிகரித்து, நீரை தக்கவைக்கும் திறனை மேம்படுத்துவதோடு, பயிர்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

மண்புழு உரத்தை தயாரிப்பது மிகவும் எளிதானது. நிழலான இடத்தில் தொட்டி அல்லது குழி அமைத்து, அதில் உலர்ந்த இலைகள், மக்கிய மாட்டுச்சாணம் மற்றும் பிற கரிமக் கழிவுகளை அடுக்கி, மண்புழுக்களை விட வேண்டும். தேவையான ஈரப்பதத்தை பராமரித்து, நேரடி வெயில் படாமல் பாதுகாத்தால், 45 முதல் 60 நாட்களுக்குள் தரமான மண்புழு உரம் தயாராகிவிடும்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் கூறுகையில், “விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி செலவை குறைத்து, வருமானத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாக மண்புழு உரம், தொழு உரம், கோழி உரம் போன்ற இயற்கை உரங்கள் நிலத்தை பக்குவப்படுத்தி, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்,” என்றார்.

மேலும், “விவசாயிகள் தாங்களே தயாரிக்கும் மண்புழு உரத்தை ஒரு ஏக்கருக்கு சுமார் 2 டன் வீதம் பயன்படுத்தினால், பயிர் மகசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதனுடன் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை ஊட்டச்சத்து கரைசல்களையும் இணைத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் கிடைக்கும்,” என்று அவர் தெரிவித்தார். வரவிருக்கும் மழைக்காலத்தை பயன்படுத்தி, பயிர் நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் மண்புழு உரத்தை இடுவதன் மூலம் மண்ணை வளப்படுத்தி, அதிக மகசூலைப் பெறலாம் என்றும் அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :

Jul 18, 2026 10:03 AM IST

Read More

Previous Post

ஐஏஎஸ் அதிகாரி வேஷம்.. முதலிரவில் கணவனை ஏமாற்றி எஸ்கேப் ஆன பெண்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பகாங் மாநில ஓராங் அஸ்லி கிராம மக்களின் துயரங்களை முன்வைப்பதாக பிரதமர் உறுதி; மூவார் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி திரட்டல் இலக்கைத் தாண்டியது. – Malaysiakini

Next Post

பகாங் மாநில ஓராங் அஸ்லி கிராம மக்களின் துயரங்களை முன்வைப்பதாக பிரதமர் உறுதி; மூவார் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி திரட்டல் இலக்கைத் தாண்டியது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin