Last Updated:
கிரிக்கெட்டில் பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிமுறைகளை எம்சிசி மாற்றி உள்ளது. அது என்ன விதி என்பது குறித்து பார்ப்போம்.
கிரிக்கெட்டில் பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிமுறைகளை எம்சிசி மாற்றி உள்ளது.
2023ம் ஆண்டு BBL கிரிக்கெட் போட்டியின் போது மைக்கேல் நெசர் பிடித்த கேட்ச், பேசுபொருளானது. பல முறை பவுண்டரி லைனுக்கு சென்ற போதும், பந்து கையில் இருந்த போது கால் தரையில் படாததால் நெசர் பிடித்த கேட்ச் விக்கெட் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான விதிகளை மேரில்போன் கிரிக்கெட் கிளப் மாற்றி உள்ளது. அதன்படி, இனி பல முறை பவுண்டரிக்கு வெளியே குதித்து பந்தை பிடிக்கும் BUNNY HOP முறைப்படி கேட்ச் பிடித்தால் அது பவுண்டரியாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் நிற்கும் ஃபீல்டர் பந்தை பிடித்துவிட்டு, ஒரே ஒரு முறை மட்டுமே பவுண்டரி லைனை இனி தாண்டி செல்ல முடியும். அடுத்த முறை, பந்தை பிடிக்கும் போது அந்த வீரர் பவுண்டரி லைனுக்குள் இருப்பதை எம்சிசி கட்டாயமாக்கி உள்ளது. இது பந்தை முதலில் பிடிக்கும் வீரர் மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பந்தை கேட்ச் பிடிக்கும் ஃபீல்டர், அந்த பந்துக்கான முடிவை அம்பயர் அறிவிக்கும் வரை பவுண்டரி லைனுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறை அடுத்தாண்டு அக்டோபர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
June 14, 2025 10:08 PM IST


