Last Updated:
சீனாவில், ஹுனான் மாகாணத்தில், சியாகை என்ற மாணவர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பெற்றோர் வீட்டின் பாஸ்வேர்டை மாற்றி, நிதி ஆதரத்தையும் துண்டித்தனர்.
சீனாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அவனது பெற்றோர் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி கதவை பூட்டியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹுவாய்ஹுவாவில் நடந்துள்ளது.
சியாகை என்ற அந்த மாணவர், சீனாவின் மிகவும் போட்டி நிறைந்த தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வான காவோகோவில் 750-க்கு 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொதுவாக இந்த மதிப்பெண் சிறந்ததாகக் கருதப்பட்டாலும், நாட்டின் உய்ர தரமான பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதற்கு இந்த மதிப்பெண் போதாது என்று அவரது பெற்றோர் நம்பியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
பள்ளிப் படிப்பு முழுவதும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவரான சியாகை இருந்துள்ளார். இருப்பினும், அவரது சமீபத்திய வீழ்ச்சிக்கு மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதே காரணம் என அவரது பெற்றோர்கள் குறை சொல்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரொம்பவும் ஆசைப்பட்டு கேட்டதால் தங்கள் மகனுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, வீட்டிற்குள் நுழைய முடியாதபடி தங்கள் வீட்டு வாயிலின் பாஸ்வேர்டை மாற்றியதோடு, மகனின் நிதி ஆதரத்தையும் துண்டித்தனர். இதனால் பரிதவித்த சியாகை, உதவிக்காக உள்ளூர் ஊடகங்களைத் தொடர்பு கொண்டார்.
“எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவன் தனது படிப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்து எனக்கொரு கடிதம் எழுதினான். ஆனால் அவன் எந்நேரமும் மொபைல் போனில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினான். அதிலேயே அதிக நேரம் செலவிட்டான்” என்று சிறுவனின் தந்தை கூறுகிறார்.
சியாகையின் தற்போதைய மதிப்பெண், கடந்த ஆண்டு பள்ளி சேர்க்கை மதிப்பெண்ணான 985-க்கு அருகில் தான் உள்ளது. அவரது சேர்க்கை முடிவு ஜூலை நடுப்பகுதியில் வெளியிடப்படும். “பள்ளியில் 985 மதிப்பெண் பெற முடியாவிட்டால், பல்கலைக்கழகத்தில் படிக்க எந்தவித செலவும் செய்ய மாட்டோம் என்று என் பெற்றோர் தன்னிடம் சொன்னார்கள்” என்று அந்தச் சிறுவன் கூறுகிறான்.
வீட்டிற்குள் நுழையாதபடி கதவை மூடியதால், சியாகை தனது தாயாரை அழைத்து, கதவை ஏன் திறக்க முடியவில்லை என்று கேட்டுள்ளார். தாயாரோ, தான் ஒரு பிசினஸ் ரீதியான பயணத்தில் இருப்பதாகவும், புதிய பாஸ்வேர்டு தனக்குத் தெரியாது என்றும் மகனிடம் கூறியிருக்கிறார்.
“எங்களிடம் எந்த உதவியும் கேட்காதே. நீ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, நன்றாகப் படிக்கவில்லை. நாங்கள் சொன்ன எதையும் கேட்கவில்லை. மேலும் உன் நடத்தையை நினைத்து நீ வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை. ஆகவே இனி உன் இஷ்டம் போல் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்று அவனது அம்மா கூறியுள்ளார்.
July 20, 2025 3:47 PM IST
“இனி நீ வீட்டுபக்கமே வராத” குறைந்த மார்க் எடுத்த மாணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத பெற்றோர்