மேலும் ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.2,000 ஆகிய மூன்று ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாகவும் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் புழக்கத்தில் இருந்தாலும், புதிய நோட்டுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டு மே 2023 முதல் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட சர்ச்சைக்குரிய ரூ.2,000 நோட்டு, வங்கிகளுக்கு கிட்டத்தட்ட முழுமையாகத் திரும்பிவிட்டன. மார்ச் 31, 2025 நிலவரப்படி, 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.2% டெபாசிட் செய்யப்பட்டன அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டன.


