• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இனியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? சிஎஸ்கே-வுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இனியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? சிஎஸ்கே-வுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடினாலும், சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

பொறுமையாக தொடங்கிய ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் கடைசியில் அதிரடி காட்டியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இருந்தாலும் இன்னும் ரன்கள் எடுத்திருக்கலாம் என்ற பார்வையே சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது.

இதையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 15.4 ஓவர்களில் ஒரே விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிப்பிடித்தது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டிக்கு பிறகு, புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 8 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு மேலும் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 16 புள்ளிகள் இருந்தால், ஒரு அணி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கருத்து உள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து உள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும்.

ஆனால் தற்போது புள்ளிப்பட்டியலில் 5 அணிகள் 10 புள்ளிகளை பெற்று முதல் 5 இடங்களில் உள்ளது. எனவே மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே இந்த முறை பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு அணிகள் தகுதி பெறும் நிலை உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் அந்த அணியால் அரையிறுதி சுற்றுகளுக்கு முன்னேற முடியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து உள்ள போட்டிகள்:

ஏப்ரல் 25 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஏப்ரல் 30 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

மே 3 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 12 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

மே 18 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

First Published :

April 21, 2025 8:19 AM IST

Read More

Previous Post

Tamil Live Breaking News : மூடநம்பிக்கையை ஒழிக்க திராவிட மாடல் அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருமா?

Next Post

தங்கம் விலை கிராம் ரூ.9000-ஐ கடந்தது | Gold rate crosses Rs.9000 per gram in Chennai

Next Post
தங்கம் விலை கிராம் ரூ.9000-ஐ கடந்தது | Gold rate crosses Rs.9000 per gram in Chennai

தங்கம் விலை கிராம் ரூ.9000-ஐ கடந்தது | Gold rate crosses Rs.9000 per gram in Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin