• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இனப்பெருக்க நேரத்தில் சீண்டியதால் டென்ஷன் ஆன சிங்கம் ; இளைஞன் பலி

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இனப்பெருக்க நேரத்தில் சீண்டியதால் டென்ஷன் ஆன சிங்கம் ; இளைஞன் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 21 வயதான சோஹில் மெமான் என்ற இளைஞர், சிங்கத் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


சோஹில் மெமான் தனது நண்பர்களுடன் இணைந்து, தடை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.


காட்டுப்பகுதியில் அவர்கள் சென்றபோது, அடர்ந்த புதர்களுக்கு இடையே ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் ஒன்றாக இருப்பதை பார்த்துள்ளனர்.அப்போது அந்த சிங்கங்கள் தங்களின் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் ஆக்ரோஷமான சூழலில் இருந்துள்ளன. பொதுவாகவே விலங்குகள் இதுபோன்ற நேரங்களில் தங்களை யாராவது தொந்தரவு செய்தால் உச்சக்கட்ட டென்ஷனாகிவிடுமாம்.. ஆனால் இது தெரியாத அந்த இளைஞர்கள், சிங்கங்களை கிட்ட சென்று பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர்.. அத்துடன் தங்களின் செல்போன்களில் போட்டோ, வீடியோக்களை எடுப்பதற்கும் முயற்சி செய்துள்ளனர்.


அதுமட்டுமல்லாமல், சத்தம் எழுப்பியும், ஃபிளாஷ் லைட் அடித்தும் சிங்கங்களின் கவனத்தை ஈர்க்க முயன்றதாக தெரிகிறது.. இளைஞர்கள் இப்படி தொடர்ந்து அத்துமீறலும், ஆத்திரமூட்டலும் செய்தபடியிருந்ததால், அங்கிருந்த ஆண் சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது.


இதனால் திடீரென அந்த ஆண் சிங்கம் சோஹில் மெமான் மீது பாய்ந்து குதறத் தொடங்கியது. சிங்கத்தின் ஆக்ரோஷத்தை பார்த்து நிலைகுலைந்த மற்ற நண்பர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.. இதனால்தான் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். ஆனால், சிங்கத்தின் பிடியில் சிக்கிய சோஹில் மெமானால் தப்பிக்க முடியவில்லை. அவரது உடல் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.


தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பின் இளைஞரின் உடலை மீட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது செல்போன்களில் இருந்த ஆதாரங்களை மீட்டெடுக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


கடந்த 20 நாட்களில் மட்டும் இப்பகுதியில் 4 முறை சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். “வனவிலங்குகளின் வாழ்விடத்திற்குள் நுழைவதும், அவற்றைத் தொந்தரவு செய்வதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். இயற்கையாகக் காணப்படும் விலங்குகளைக் கவனிப்பதில் தவறில்லை, ஆனால் அவற்றின் இயல்பு வாழ்க்கையில் தலையிடுவது உயிருக்கே ஆபத்தாகிவிடும்” என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


 



Read More

Previous Post

பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் மூன்றாவது முறையாகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Next Post

முதல் வரிசையில் யார் நிற்பது? காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்பு நிர்வாகிகள் அடிதடி.. களேபரம் | Two Congress functionaries clash infront of Thirunelveli MP Robert bruce at Kamaraj’s birthday oath-taking ceremony

Next Post
முதல் வரிசையில் யார் நிற்பது? காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்பு நிர்வாகிகள் அடிதடி.. களேபரம் | Two Congress functionaries clash infront of Thirunelveli MP Robert bruce at Kamaraj’s birthday oath-taking ceremony

முதல் வரிசையில் யார் நிற்பது? காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்பு நிர்வாகிகள் அடிதடி.. களேபரம் | Two Congress functionaries clash infront of Thirunelveli MP Robert bruce at Kamaraj's birthday oath-taking ceremony

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin