Last Updated:
டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தில் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்தார்.
கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு டிரம்ப், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
முழுமையாக கிரீன்லாந்தை அமெரிக்கா கொள்முதல் செய்வதை ஏற்காத பட்சத்தில் மேலும், ஜூன் 1 முதல் இந்த 8 நாடுகளுக்கும் 25 சதவீதம் வரை இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிரீன்லாந்தை கையகப்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் அமெரிக்காவுக்கு எதிராக கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.


